எம்மைப்பற்றி செய்திகள் சேவைகள் பிரசுரித்தல் விபரம் பிரிவுகள் வெப் இறக்கம்
 
திணைக்களத்தின் பிரிவுகளை நிறுவுதல்
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
காணிப்பிரிவு: காணிப்பிரிவு மற்றும் ரண்பிம பிரிவு என இரண்டு பிரிவுகள்

நோக்கம்:
பொருளாதார மற்றும் உற்பத்தித்திறன் அபிவிருத்தியில் பங்களிப்பை வழங்க, நில உரிமைகளை உங்களுக்குத் தருவது எங்கள் நோக்கம்.

பணிகள் :
  1. பல்வேறானவர்களுக்கு வதிவிட, வர்த்தக, கமச்செய்கை ஆகிய நடவடிக்கைகளுக்கென நீண்டகாலக் குத்தகைகளை வழங்குதல்.

  2. நீண்டகாலக் குத்தகைகளைக் கைமாற்றுதல், உபபிரிவுகளாக அமைத்தல், ஈடுவைத்தல் மற்றும் கீழ்க்குத்தகை வழங்கல்.

  3. வதிவிட நோக்கத்திற்காக அளிப்புப் பத்திரங்களை வழங்குதல்.

  4. சமய வழிபாட்டுத் தலங்களுக்கு சட்டபூர்வமான ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல். (பௌத்த விஹாரைகளுக்கு ஆரம்பக் குத்தகை முறி அல்லது உறுதி பெற்றுக்கொடுத்தல் மற்றும் ஏனைய சமய வழிபாட்டுத் தகலங்களுக்கு நீண்டகாலக் குத்தகைகள் வழங்குதல்).

  5. பொது நிறுவனங்களுக்குப் பொதுவான தேவைகளுக்கு அரச காணித் துண்டுகள் வழங்குதல்.

  6. அரச திணைக்களங்களுக்குக் காணிகளை விடுவித்துக் கொடுத்தல்.

  7. உள்ளுர் ஆட்சி நிறுவனங்கள் மற்றம் முப்படைகளுக்கு உடமைச் சொத்துவம் மூலம் காணிகளை வழங்குதல்.

  8. விசேட பொரளாதார அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு நீண்ட காலக்குத்தகை அல்லது அளிப்பு மூலம் காணிகளை வழங்குதல்.
- ரண்பிம பிரிவு -
  1. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ், ரண்பிம அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்,

  2. நடுத்தர வகுப்புக் காணிகளுக்கு அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்.

  3. காணி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின்கீழ், ஆதனவளிப்புச் சாதனங்கள் பெற்றுக்கொடுத்தல்.

  4. காணிகள் விடுப்புக் கட்டளைச் சட்டத்தின்கீழ், ஏற்புடைத்தான சட்டமுறைகளின்கீழ், நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அடங்கிய அளிப்புப் பத்திரங்களை நிபந்தனைகள் இல்லாத விடுவிப்பு அளிப்புப் பத்திரங்களாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

  5. அளிப்புப் பத்திரங்களிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கிடைக்கப் பெறுகின்ற பல்வேறு முறையீடுகள் மற்றும் மனுக்கள் சம்பந்தமான அறிவுறுத்தல்களை வழங்குதல்.

  6. காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டத்தின்கீழ், வழங்கப்படும் அளிப்புப் பத்திரங்களைப் பல்வேறு காணிகளுக்காக நீக்குதல் செய்யும் பணிகள்.

  7. குறித்த காணிப் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வினவப்படும் வினாக்கள், நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்கள் மற்றும் பொது மக்களின் மனுக்களை விசாரணை செய்யும் குழுக்களின் வினாக்களுக்கு விடைகளைத் தயாரித்தளித்தல்.

  8. “ஒரு இலட்சம் காணித்துண்டுகள் பகிர்ந்தளிக்கும் தேசிய வேலைத்திட்டம்” தொடர்பான பணிகளை ஒன்றிணைத்தல், அவை தொடர்புடைய தகவல்களைச் சேகரித்தல், மற்றும் முன்னேற்ற அறிக்கைகள் சமர்ப்பித்தல்.
Inquiries:
  • காணி ஆணையாளர் (காணி)
    தொலைபேசி இலக்கம் : +94-11-2695824
    மின்னஞ்சல்: landcom@sltnet.lk

  • பிரதிக் காணி ஆணையாளர் (காணி)
    வடமத்திய மாகாணம், முதலீட்டுச்சபைச் செயற்திட்டங்கள், கைத்தொழில் அமைச்சுச் செயற்திட்டங்கள்
    தொலைபேசி இலக்கம் : +94-11-2675571


  • உதவிக் காணி ஆணையாளர் (காணி)
    மேல்மாகாணம், மத்திய மாகாணம் போலொன்னறுவ மாவட்டம்
    தொலைபேசி இலக்கம் : +94-11-2675576


  • உதவிக் காணி ஆணையாளர் (காணி)
    அரச நிறுவனங்களுக்கு காணிகளை விடுவித்தல்
    தொலைபேசி இலக்கம் : +94-11-2695835


  • உதவிக் காணி ஆணையாளர் (காணி)
    ஊவ, வடமேற்கு, சபரகமுவ மாகாணம்
    தொலைபேசி இலக்கம் : +94-11-2675572


  • உதவிக் காணி ஆணையாளர் (ரண்பிம)
    தொலைபேசி இலக்கம் : +94-11-2689573

    மேல்^

அபிவிருத்திப் பிரிவு

நிறைவுசெய்யப்படும் பணிகள்

மாகாணங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட காணிகள் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்தல் இதன் பிரகாரம்:

  1. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ், அரச காணிகளைக் கையுதிர்த்தல்
    1. அரச காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்காகக் காணிக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்குதல். ஆட்சேபனைகள் மற்றும் இது தொடர்புடைய விடயங்கள் குறித்துப் பிரதேசச் செயலகங்களை நெறிப்படுத்துதல்

    2. அத்துமீறல்களை உரியவாறு முறைப்படுத்துதல்
      1995.06.15ஆம் திகதிக்கு முன்பு, ஏதாவதொரு காணித்துண்டினை (நகர்ப்பகுதியைச் சேராத) அபிவிருத்தி செய்து வந்த ஒருவரை அக்காணியிலிருந்து வெளியேற்றுவதற்கு இயலாத சந்தர்ப்பத்தில் தகைமைகளை பரீட்சித்து அனுமதி வழங்குதல்..

  2. காணி அபிவிருத்தி
    மேட்டுநில அபிவிருத்திச் செயற்திட்டம்
    காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தின் மூலமாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்வதற்கும் காணி பெறுநர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தவும் தேவையானஉதவிகளை வழங்குதல்.

  3. உலக உணவுத் திட்டத்தின் பொருள்களை அகற்றுதல் மற்றும் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகள்.

  4. காணிப் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ளும் நோக்குடன் பொதுமக்கள் பங்குகொள்ளும் கூட்டங்களை நடாத்துதல்.

  5. தொழில்நுட்பப் பிரிவு
    காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்திற்குரிய பாரிய விவசாயக் குடியேற்றத்திட்டங்களில் அமைந்துள்ள கட்டடங்கள் பாதைகளைப் பேணுதலும் அபிவிருத்தி செய்தலும், இப்பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

  6. முன்னேற்ற நிருவாகம் மற்றும் செயற்படுத்தும் பிரிவுகள்


    • மாகாணங்களுக்கிடைப்பட்ட மற்றும் மாகாண சபைகளுக்குக் குறிப்பீடு செய்யப்பட்ட காணிகளைப் பகிர்ந்தளித்தல், குத்தகை முறிகள் மற்றும் அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், மாதாந்த முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் வருடாந்த நிருவாக அறிக்கைகளைத் தயாரித்தல்

    • மாகாணங்களுக்கிடைப்பட்ட மற்றும் மாகாண சபைகளுக்குரிய அரச காணிகள் மற்றும் அவற்றில் செயற்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்திட்டங்கள் தொடர்பான தரவுகள் வங்கியைப் பேணிநடாத்துதல்.

    • பணியணியினருக்கான பயிற்சிக் கற்கைகளை நடத்துதல் மற்றும் கடமைகளில் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடத்துதல்.

    • காணி தொடர்பான பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ளும் நோக்குடன் பல்வேறான அலுவலர்களுக்கும் பொது மக்களுக்கும் சமூக அறிவியல் அடிப்படையில் அறிவூட்டல்களை நடத்துதல்.

    • மாகாணங்களுக்கிடைப்பட்ட காணிகளுக்கான வருமானத்தைச் சேகரித்தல் மற்றும் அவற்றைக் கணக்கீடு செய்தல்.

விசாரணைகள்:
  • காணி ஆணையாளர் (அபிவிருத்தி)
    தொலைபேசி இலக்கம : +94-11-2684025
    மின்னஞ்சல்: landcom@sltnet.lk

  • பிரதிக் காணி ஆணையாளர் (அபிவிருத்தி)
    தொலைபேசி இலக்கம : +94-11-2677293

  • உதவிக் காணி ஆணையாளர் (அபிவிருத்தி)
    தொலைபேசி இலக்கம : +94-11-2683812

  • உதவிக் காணி ஆணையாளர் (அபிவிருத்தி)
    தொலைபேசி இலக்கம : +94-11-2675573

  • உதவிக் காணி ஆணையாளர் (தொழில்நுட்பம்)
    தொலைபேசி இலக்கம : +94-11-2672632

  • சமூக விஞ்ஞானி
    தொலைபேசி இலக்கம : +94-11-2695837

    மேல்^

சட்டப்பிரிவு
திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளின் போது உபயோகப்படுத்தும் அலுவலக ஒழுங்குக் கட்டளைகள் மற்றும் நிருவாக ரீதியாக ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பான சட்ட மதியுரைகளை வழங்குதல் மற்றும் அவை சார்ந்த நடவடிக்கைகள்

விசாரணைகள்:
உதவிக் காணி ஆணையாளர் (சட்டம்)
தொலைபேசி இலக்கம் : +94-11-2675577
மின்னஞ்சல்:: landcom@sltnet.lk

மேல்^
நிருவாகப் பிரிவு

பணிகள்::
  • திணைக்களத்திலுள்ள உள்ளகப் பணியணியினர்களின் வழiயான நிருவாக நடவடிக்கைகள்
    • திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல், வினைத்திறன்காண் தடைப்பரீட்சை விவகாரங்கள்
    • அனைத்து அலுவலர்களினதும்:

      • பதவி உயர்வுகள்
      • இடமாற்றங்கள்
      • சம்பளம் (சம்பள உயர்வுக் கொடுப்பனவுகள், சமபளத்தில் மாற்றங்கள்)
      • அலுவலக ஆளடையாள அட்டைகள்
      • செயல்திறன் மதிப்பீடு
      • லீவு
      • கடன், பிணை
      • ஒழுக்காற்று விசாரணைகள்
      • மேலதிக நேரக் கொடுப்பனவு
      • புகையிரதப் பிரயாண அனுமதிப்பத்திரங்கள்ஃசலுகை அடிப்படையிலான பருவகால அனுமதிச் சீட்டுக்கள்
      • காப்புறுதி
      • தொழிற்சங்க விவகாரங்கள்
      • ஓய்வுதியம் பெறச் செய்தல்

  • திணைக்களத்தின் அலுவலக வதிவிடங்களை ஒதுக்குதல், வாடகை அறவிடுதல் அமைச்சரவைப் பத்திரங்கள் தயாரித்தல்

  • பாதுகாப்பு, சுத்திகரிப்புச் சேவைகளைத் தெரிவு செய்தல்ஃசேவைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் அவற்றிற்கான கொடுப்பனவு நடவடிக்கைகள்

  • அலுவலகக் கட்டடங்கள் மற்றும் உபகரங்கள் தொடர்புடைய சேவை ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல், கொடுப்பனவுகள் செய்தல்

  • தினசரி கிடைக்கப்பெறும் அஞ்சல்களை விநியோகித்தல்

  • வாகனங்கள் குழாத்தைப் பராமரித்தல்.

விசாரணகைள் :

  • பிரதிக் காணி ஆணையாளர் (நிருவாகம)
    தொலைபேசி இலக்கம. : +94-11-2695844
    மின்னஞ்சல்Email : landcom@sltnet.lk

  • உதவிக் காணி ஆணையாளர் (களஞ்சியம் போக்குவரத்)
    தொலைபேசி இலக்கம. : +94-11-2677292

  • உதவிக் காணி ஆணையாளர் (தாபனம)
    தொலைபேசி இலக்கம. : +94-11-2671173

  • நிருவாக அலுவலர்
    தொலைபேசி இலக்கம. : +94-11-2675579

    மேல்^

கணக்கு மற்றும் நிதிப்பிரிவு
  1. கொடுப்பனவு செய்யவேண்டியுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் குறித்த தினத்தில் கொடுத்தல்.

  2. மாதாந்தக் கணக்கீட்டு அறிக்கை, வருடாந்த செலவின மதிப்பீடு, வருமான மதிப்பீடு, வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கு, வருமானக் கணக்கு, முற்பணக்கணக்கு மற்றும் ஏனைய ஒப்பீட்டுக் கூற்றுக்கள் ஆகியவற்றைத் தயாரித்தல் மற்றும் திறைசேரிக்கு அறிக்கை சமர்ப்பித்தல்.

  3. பிரதேச அலுவலகங்களுக்கு நிதி ஏற்பாடுகளை ஒதுக்கி அனுப்புதல், முற்பணத்தை விடுவித்தல்.

  4. உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினைச் செயற்படுத்துதல்.

  5. விலை மனுக்கள் கோருதல், பொருள்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் தலைமை அலுவலக களஞ்சியசாலையை நிருவகித்தல்.

  6. வருடாந்தப் பொருள்கள் மீளாய்வு செய்தல் மற்றும் ஏற்புடைத்தான பின்விசாரணைகளை மேற்கொள்ளுதல்.

  7. கணக்காய்வு வினாக்களுக்கு விடைகள் தயாரித்து அனுப்புதல்.

  8. நிதிப்பிரிவிலுள்ள பணியணியினர் தொடர்பான சாதாரண நிருவாகம் மற்றும் பயிற்சி அளித்தல்.

விசாரணைகள் :

  • பிரதிக் காணி ஆணையாளர் (நிதி)
    தொலைபேசி இலக்கம் : +94-112695844
    மின்னஞ்சல் : landcom@sltnet.lk

  • உதவிக் காணி ஆணையாளர் (நிதி)
    தொலைபேசி இலக்கம். : +94-11-2677292

  • உதவிக் காணி ஆணையாளர் (நிதி)
    தொலைபேசி இலக்கம் : +94-11-2671173
 
மேல்^
காணிப்பிரிவு
அபிவிருத்திப் பிரிவு
சட்டப்பிரிவு
நிருவாகப் பிரிவு
கணக்கு மற்றும் நிதிப்பிரிவு
Download Tamil
    
© 2007 Land Commissioner General's Department All Rights Reserved – Developed in Association with Site By