எம்மைப்பற்றி செய்திகள் சேவைகள் பிரசுரித்தல் விபரம் பிரிவுகள் வெப் இறக்கம்
 
தரைஇறக்கம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி தொடர்பான முகாமைத்துவத்தை விதிமுறைப்படுத்துதல்

2011-08-09

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தோன்றியுள்ள காணிகள் தொடர்புடைய பிரச்சினைகளை நிவிர்த்தி செய்து, இந்த நடவடிக்கைகளை விதி முறைப்படுத்தும் நோக்குடன், செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்குக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. (இதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கையை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்) சுற்றறிக்கை இலக்கம் 2011/04

செயற்திறன் அறிக்கை

2007-07-13

செயற்திறன் அறிக்கை
தரைஇறக்கம் ( 2.3 MB )
1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கக் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் மூலம் காணி ஆணையாளர் திணைக்களம் தாபிக்கப்பெற்றது..

2007-06-12

1969ஆம் ஆண்டின் இலக்கம் 16, 1981ஆம் ஆண்டின் இலக்கம் 27, 1993ஆம் ஆண்டின் இலக்கம் 22, 1995ஆம் ஆண்டின் இலக்கம் 05 மற்றும் 1996ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கச் சட்டங்களினூடாகத் திணைக்களத்தின் பணிகள் மேலும் விரிவாக்கப்பட்டன.

1947ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச்சட்டத்தின் மூலம் அரச காணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காணி ஆணையாளருக்குக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்கீழ்:

2007-06-11

தனிநபர்களுக்கும் கம்பனிகளுக்கும் அரச காணிகளை நீண்டகாலமக் குத்தகையில் வழங்கல்.
பிரதேச அதிகார சபைகள் மற்றும் படைகளுக்கு உடைமைச் சொத்துவம் மூலம் அரச காணிகளை வழங்;குதல்.
சமயம் சார்ந்த அல்லது அறஞ்சார்ந்த மற்றும் அறிவியல் நடவடிக்கைகளுக்கென விசேட அளிப்புப் பத்திரங்கள் அல்லது விசேட குத்தகை முறிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
சமய விவகாரங்களுக்கென அரச காணிகளை வழங்குதல்.
விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்திச் சபைகள் ஆகிய நிறுவனங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக்கொடுத்தல்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரச காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
அரசுடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு விசேட அளிப்பு அல்லது குத்தகை மூலம் அரச காணியைப் பெற்றுக்கொடுத்தல்,


1979ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க அரச காணிகள் அளிப்புச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் செயற்படுதல்:

2007-06-08

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணிகளை சட்டமுறைக்கு அமைவான நடவடிக்கைகள் மூலம் வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல்கள் பிரசுரிக்கப்பட்ட பின்னர், அரசுக்கு உரிமையாக்கிக்கொண்டு, இக்காணிகளை காணிகளற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கும், காணிகளை அபிவிருத்தி செய்யக் கூடிய வலுவுள்ள நபர்களுக்கும் ஆதனவளிப்புச் சாதனம் மூலம் கையுதிர்த்தல் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
காணிச் சீர்திருத்த விடயத்திற்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரின் இணக்கத்துடன் காணி அமைச்சரினால் வர்த்தமானப் பத்திரிகையில் அறிவித்தல் பிரசுரித்து குறிப்பீடு செய்யப்பட்டுள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணிகளை அரசுக்கு உடைமையாகச் சட்ட முறைப்படி ஆக்கிக்கொள்ளுதல்.
ஒரு சட்ட பூர்வமான வழிமுறையின் மூலம், அதாவது காணிக் கச்சேரியின் மூலம் பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு அதி உத்தம ஜனாதிபதி அவரகளின் கையொப்பத்தைத் தாங்கியுள்ள ஆதனவளிப்புச் சாதனம் மூலம் உரிமையைப் பெற்றுக்கொடுத்தல்.

1942ஆம் ஆண்டின் 61ஆம் இலக்கக் காணி விடுவித்தல் கட்டளைச் சட்டம் செயற்படுத்தப்படுதல்.

2007-06-07

பிரசைகளுக்குரித்தான தனிப்பட்ட காணிகள் ஏதும் பொறுப்புகளுக்கு உட்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் பொறுப்புகளுக்குட்பட்ட குறித்த காணி உரிமையாளரின் வேண்டுகோளுக்கமைய காணி ஆணையாளர் பிரச்சினையைத் தீர்த்துவைத்துக் காணியைச் சட்ட பூர்வமாக அரசின் உரிமைக்குப் பெற்றுக் கொண்டபின்பு, குறித்த நபருக்கு விடுவித்துக் கொடுத்தல்.
இவ்வாறு சட்டபூர்வமாகக் கையேற்கப்பட்டுள்ள காணிகளை, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப நிபந்தனைகளுடனான அளிப்புப் பத்திரமாக ஆரம்ப உரிமையாளருக்குப் பெற்றுக்கொடுத்தல்.
குறித்த காணியைக் கையேற்புச் செய்வதற்கு அரசுக்கு ஏற்பட்ட செலவுத் தொகையை காணி உரிமையாளரிடமிருந்து அரசுக்குக் கிடைத்த பின்பு, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய விடுப்பு அளிப்புப் பத்திரத்தைப் பெற்றுக்கொடுத்தல்.

1979ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க அரச காணிகள் (ஆட்சியை மீளப்பெறும்) சட்டம்

2007-06-07

அரச காணிகளை அத்துமீறிப்பிடிப்பவர்களைச் சாதாரண சட்ட நடவடிக்கைகளின் மூலம் காலதாமதமின்றி வெளியேற்றுவதற்கென இச்சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 
மேல்^
Download Tamil
    
© 2007 Land Commissioner General's Department All Rights Reserved – Developed in Association with Site By