சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியில் அனைத்துக் காணிகளும் அரசனுக்கே உரிமையாக இருந்ததுடன், காணிகளின் உரிமைகளும் அவற்றை அனுபவிப்பதன் மூலமே நிர்ணயிக்கப்பட்டது. அவை பரம்பரை வழியில் வந்த காணிகளாகும். நிந்தகம், விஹாரகம் ஆகியவாறு காணிகள் கையுதிர்த்தல் செய்யப்பட்டது.
இவ்வாறாக வழக்கிலிருந்து வந்த காணிகளின் உரிமை, 1815ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியாவின் ஆட்சியின்கீழ் வந்தது தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த 1840ஆம் ஆண்டின் வரண்ட நிலச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும் மாற்றம் கண்டது. இதன் பிரகாரம், நாட்டின் மொத்தக் காணிகளில் பெரும்பகுதி அரசுக்குரித்தான காணிகளாக நிர்ணயிக்கப்பட்டதுடன் அதுவரையிலும் பரம்பரை வழிமுறையில் காணிகளை அனுபவித்து வந்த பெருவாரியான இலங்கை மக்களுக்கு அந்தக் காணிகள் உரிமையற்றதாக ஆகின.
பின்னர், 1931ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் சட்டத்தின் மூலமாகக் கிடைத்த பாதியளவு சுதந்திர நிருவாக அமைப்பு முறை மூலமாகக் காணிகளை இழந்த மக்களுக்குக் காணிகளை வழங்கவேண்டிய தேவை தலைதூக்கியது. ஆகையினால் இந்த வேலைத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்குடன், காணி நிருவாகம் காணியைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கென 1935ஆம் ஆண்டில் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிருவாகக் கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் காணி ஆணையாளர் திணைக்களம் நிறுவப்பட்டது. அப்போது மத்திமப்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ், அரசாங்க அதிபரின் அலுவலகம் மூலமாகக் காணி தொடர்பான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும்>> |