| செய்திகளும் நிகழ்வுகளும் |
‘பிம்சவிய’ வேலைத்திட்டம்
2008-07-18
‘பிம்சவிய’ (காணி உரித்துச் சான்றுப் பத்திரம் வழங்குதல்) வேலைத் திட்டத்தின் கீ்ழ், காணிக்குரிய உரித்தைப் பதிவு செய்து கொள்வதை இலகுவாக்கும் நோக்குடன், அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி குறித்த காணித் துண்டுகளில் வதியும் மக்களுக்குக் காணிக்குரிய உரித்தைப் பெற்றுக் கொடுப்பதாகும்.
Bimsaviya (Download) (
890.5 KB )
|
திராட்சை மற்றும் தாய்லந்து கொய்யாப் பழச் செய்கை
2008-07-15
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், திணைக்களத்தினால் பகிர்ந்தளிக்கப்படும் நீர்ப் பாய்ச்சல் வசதிகளைக் கொண்ட காணிகள் நல்ல முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த போதிலும், மேட்டு நிலங்களின் அபிவிருத்தி குன்றிய நிலையில் இருந்தமையினால், இக் காணிகளின் உற்பத்தித் திறனை மேலும் வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் இந்தச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
Highland Project (Download) (
5.9 MB )
|
நீங்கள் அரச காணிக்குரிய குத்தகைப் பணத்தைச் செலுத்திவிட்டீர்களா ?
2008-07-08
அரச காணிக்குரிய குத்தகைப் பணத்தை ஒழுங்கு முறையாகச் செலுத்தத் தவறும் நபர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுடைய பிணை முறிகளை நீக்குதல் செய்வதற்கும், அவர்களுக் கெதிராகக் குடியியல் வழக்குகளைத் தாக்கல் செய்து, அரசுக்குரித்தான பணத்தைச் சட்டரீதியான வட்டியுடன் அறவிட்டுக் கொள்வதற்கும் திணைக்களத்தின் சட்டப்பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு துரிதமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது.
Duties of Law (Download) (
25.3 KB )
|
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட 2007 ஆம் ஆண்டிற்குரிய செயற்பாடுகள் தொடர்பான பின்னோக்கு ………
2008-01-04
2007 ஆம் வருடம் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்திற்கு அதி முக்கியமானதும் அனேக செயற்பாடுகளில் உற்பத்தித் திறனில் மிகுந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தித்தந்துள்ள வருடமாகும். திணைக்களத்திற்கு 75 வருடங்கள் பூர்த்தியான நிகழ்வை நினைவு கூருமுகமாக மேற்கொள்ளப்பட்ட விழா நிகழ்ச்சிகளும், நீண்ட காலமாக எமது திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டடம் இல்லாமல் இருந்த குறையை நீக்குமுகமாகச் சொந்தக் கட்டடத்திற்காக பத்தரமுல்ல நகரில் அமைந்துள்ள காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்திற்கு அண்மித்த காணியில் செத்தம்பர் மாதம் 06 ஆந் திகதி அடிக்கல் வைத்த சம்பவமும் மிக முக்கிய நிகழ்வுகளாகும்.
Follow up 2007 (Download) (
3.6 MB )
|
2007 ஆம் ஆண்டின் தேசிய உற்பத்தித் திறனைக் கௌரவிக்கும் விழா
2007-12-11
23.10.2007 ஆந் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வேளை, தேசிய ரீதியிலான திறமைச் சான்றிதழைக் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் பெற்றுக் கொண்டது.
|
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தின் தலைமை அலுவலகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்
2007-09-06
1931 ஆம் ஆண்டில் காணி ஆணையாளர் திணைக்களம் ஆரம்பமாகியிருந்தும், இது வரைக்கும் வாடகை அமைவிடத்திலிருந்தே சேவையாற்றி வந்துள்ளது. இத் திணைக்களத்திற்கான சொந்தக் கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கும் பணியை முன்னெடுத்திச் செல்லும் நோக்குடன், பத்தரமுல்ல ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள கமத்தொழில் அமைச்சுக்கு அண்மித்த காணியில், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜீவன் குமாரணதுங்க அவர்களின் முன்னிலையில், தற்போதையக் காணி ஆணையாளர் நாயகம் திரு. எஸ்.டி.ஏ.பி. பொரலெஸ்ஸ அவர்களினால் 2007 செத்தெம்பர் 06 ஆந் திகதி முற்பகல் 9.27 சுபமு௬ர்த்தத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
|
|
|
| மேல்^ |