| சேவைகள் |
| அரசின் காணிக் கொள்கைகளை சட்டமுறைப்படுத்தல். |
அரசின் காணிக் கொள்கைகளைத் தீர்மானித்தல் மற்றும் மாகாணக் காணி ஆணையாளர்களையும் பிரதேசச் செயலாளர்களையும் இது தொடர்பாக வழிநடத்துதல்
இலங்கைத் தேசத்தினுள் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான காணிகளின் கட்டுப்பாடு, நிர்வாகம் மற்றும் இந்தக் காணிகளைப் பல்வேறு தேவைகளின் பொருட்டு, பல்வேறான தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதும், அந்தக் காணிகளைப் பாதுகாப்பதும் அபிவிருத்தி செய்வதற்குமான பணிகளை மேற்கொள்வதும் இந்தத் திணைக்களத்தின் முக்கிய கடமையாகும். இதற்கேற்ப, காணிகள் தொடர்பான கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றைச் செயற்படுத்தும் முதன்மைப் பணி இத்திணைக்களத்திற்குத் தரப்பட்டுள்ளதுடன், பல்வேறு அரசுடன் இணைந்துள்ள நிறுவனங்களுக்குரிய காணிகள் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேளைகளில் பொதுவாக இத்திணைக்களத்துடனும் கலந்தாலோசனைகள் நடைபெறுகின்றன.
இந்த அரச காணிகள் தொடர்பான கொள்கைகளைச் செயற்படுத்தப்படும்போது, இத்திணைக்களம், நிருவாக மட்டத்திலான பல அலகுகளுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றது. இதன் பிரகாரம், மாகாண சபைகளின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள காணி நிருவாக நடவடிக்கைகள், மாகாணக் காணி ஆணையாளர் மூலமாகவும் மாகாணங்களுக்கிடைப்பட்ட நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்குட்பட்ட காணிகள், நேரடியாக மத்திய அரசின்கீழ் காணி ஆணையாளர் நாயகத்தின் கீழ் வருகின்ற பிரதேச அலுவலர்கள் (பிரதிக் காணி ஆணையாளர்கள்) மூலமாகவும் மேற்பார்வை செய்யப்படுகின்றன. இவ்வாறாக மத்திய அரசின் காணி ஆணையாளர் நாயகம் மாகாணக் காணி ஆணையாளர் இருவரினதும் பிரதேச மட்டத்தில் கடமைபுரியும் அலுவலர் பிரதேசச் செயலாளர் ஆகும், இந்த மூன்று நிருவாகிகளும் பின்பற்றிக் கையாள்வது ஒரே சட்ட ஒழுங்கு விதிகளையே.
மாகாண சபைகளின்கீழ் காணி நிருவாகப் பொறுப்புக்கசில காட்டப்பட்டுள்ளபோதிலும் நாடு முழுவதிலும் பொதுவான ஒரு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகையால், மாகாணக் காணி ஆணையாளர்களுடன் நிரந்தர தொடர்புகளைப் பேணுவதும், தேவையான சட்டரீதியான விடயங்களுக்கு ஆலோசனைச் சேவைகள் வழங்குவதும், பொதுமக்கள் நேரடியாகச் செய்யும் விசாரணைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதும் இத்திணைக்களத்தின் முக்கிய கடமையாகப் பேணப்படுகிறது.
|
| அரச காணிகளைக் கையுதிர்த்தல் |
அரச காணிக் கட்டளைச் சட்டத்தின்கீழ், காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பான நடவடிக்கை முறைகள்
அரச காணிகளை எவ்வாறான தேவைகளுக்காக எந்த அளவில் பிரசைகளுக்கும் அமைப்புக்களுக்கும் வழங்க வேண்டுமென்பதை இந்தக் கட்டளைச் சட்டம் நெறிப்படுத்துகின்றது. |
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ் காணிகளை கையுதிர்த்தல் தொடர்பான நடவடிக்கை முறைகள்
இலங்கையில்இ விவசாயிகள் வகுப்பைச் சேர்ந்தவர்கள், குறைந்த வருமானம் பெறும், கூடிய வருமானம் பெறும் மற்றும் படித்த இளைஞர்கள் யுவதிகள் ஆகிய குழுக்களைச் சேர்ந்தலர்களுக்குக் கமச் செய்கை அல்லது வதிவிடம் அமைத்தல் அல்லது இவ்விரண்டு நொக்கங்களுக்கும் காணிகளை வழங்குதல் இக்கட்டளைச் சட்டம் மூலம் முடியுமாகின்றது. வேறு காரணவ்களுக்காக இக்கட்டளைச் சட்டத்தின் கீழ், காணிகள் வழங்க முடியாது. |
காணி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின்கீழ், காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பான நடவடிக்கை முறைகள்.
காணி சீர்திருத்தச் சட்டத்தின்கீழ், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை, விவசாயி வகுப்பினர்களுக்கு கமச் செய்கை அல்லது வதிவிடம் அமைத்தல் அல்லது இவ்விரண்டு நொக்கங்களுக்கும் காணிகள் வழங்குதல் இச்சட்டத்தின் மூலம் முடியுமாகின்றது. வேறு எவ்விதக் காரணங்களுக்கும் இச்சட்டத்தின் கீழ் காணிகள் வழங்க முடியாது.
மேல்^
|
| கையுதிர்த்தல் செய்யப்பட்டுள்ள காணிகளுக்கு சட்டமுறையிலான உரிமைச் சொத்துவம் தொடர்பான ஆவணங்கள் வழங்குதல். |
ரண்பிம உறுதிகள் வழங்குதல்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டதிதின் 19(4)ஆம் பிரிவின் கீழ் அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளவரினால்இ காணி நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதுடன் அரசுக்குச் சேர வேண்டிய கொடுப்பனவுகளை அவர் செலுத்திய பின்னர், இப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஆவணங்கள் காணி அமைந்துள்ள பிரிவுக்குரிய பிரதேசச் செயலாளர் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு, காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆவணம் இத்திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட்டு அதி உத்தம சனாதிபதி அவர்களின் கையொப்பத்திற்காக அனுப்பி வைக்கப்படும். அது கிடைத்த பின்னர், பிரதேசச் செயலாளர் மூலமாகக் காணிப்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டு மூலப்பிரதி அனுமதிப்பத்திரம பெற்றுள்ளவருக்கு கையளிக்கப்படும்
|
ஆதனவளிப்புச் சாதனப் பத்திரம்
1973 ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காணிகள் அளிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த அளிப்புப் பத்திரம் வழங்கப்படும். இவ்வளிப்புப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்குக் காணி நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும. இந்த அளிப்புப் பத்திரத்திற்குச் சேவைக் கட்டணம் அறவிடப்படமாட்டாது. ரண்பிம அளிப்புப் பத்திரம் தயாரிக்கப்படுவது போன்றே இந்த அளிப்புப் பத்திரமும் தயாரிக்கப்படுகிறது.
|
நடுத்தர வகுப்பு அளிப்புப் பத்திரம்
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ், கூடிய வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக இந்த அளிப்புப்பத்திரம் வழங்கப்படுகிறது. இந்த செயற்திட்டத்தின் மூலம் 5 ஏக்கர்களுக்கு மேற்பட்ட விஸ்தீரணமுள்ள காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளதுடன, அளிப்புப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு அரசுக்குச் சேர வேண்டிய கட்டணத்தை முற்றாகச் செலுத்தியும் காணி நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டு இருத்தலும் வேண்டும்.
|
காணிகளை விடுவிக்கும் கட்டளைச் சட்டத்தின்கீழான இலவச அளிப்புப் பத்திரம்
காணிகளை விடுவிக்கும் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இங்கே குறித்த காணியை அரசுக்கு மாற்றம் செய்வதில் ஏற்பட்ட செலவுத் தொகை மற்றும் வட்டித்தெகை ஆகியவற்றை அரசுக்குச் செலுத்திய பின்பு, உரிமையாளருக்கு நிபந்தனைகளற்ற அளிப்புப் பத்திரங்களாக இலவசமாக வழங்கப்படும். |
நீண்ட காலக் குத்தகை அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்
1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச்சட்டத்தின்கீழ் குத்தகை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. வதிவிடம், கமச்செய்கை மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 30 வருடங்களுக்கு நீண்ட காலக் குத்தகை வழங்கப்படுகின்றன. விசேட செயற்திட்டங்களுக்காக குத்தகைக் காலப்பகுதியை 50 வருடங்களாக நீடிக்க முடியும். ஆரம்ப குத்தகைக் காலம் வெற்றியாக நிறைவைப் பெற்றிருக்குமிடத்து மீண்டும் குத்தகைக் காலத்தை நீடிக்க முடியும். இந்த அனுமதிப் பத்திரத்தைக் காணி ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதியைப் பெற்றுக்கொண்டு கைமாற்றம் செய்யவோ ஈடுவைக்கவோ முடியும். |
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்
வதிவிட நோக்கத்திற்காகக் குத்தகையில் வழங்கப்பட்ட காணி, வெற்றிகரமாக செய்முறைப்படுத்தப்பட்டிருப்பின், காணியின் அபிவிருத்தி செய்யப்படாத பெறுமதியை அறவிட்டுக்கொண்டு அளிப்புப் பத்திரம் ஒன்றை வாங்க முடியும். இந்த அளிப்புப் பத்திரம் வழங்கப்பட்ட பின்பு, குறித்த நபருக்குக் காணியின் பூரண உரிமை உரித்தாகும். |
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் விசேட அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்
விசேட காரணங்களுக்காக அதி உத்தம ஜனாதிபதி அவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அளிப்புப் பத்திரம் வழங்க முடியும். இதற்குப் பணம் அறவிடப்படமாட்டாது. அரசின் விசேட சமூக சேவைகளுக்கான செயற்திட்டங்களுக்காகப் பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களுக்குக் காணிகள் வழங்குவதும், அரசு கையேற்புச் செய்த தனிப்பட்ட நபர்களின் காணிகளுக்கான நட்டஈட்டுத் தொகையைப பெற்றிராத நபர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்குவதும் இதற்கு உதாரணங்களாகும். |
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் பூஜா உறுதிகள் வழங்குதல்
இவை விஹாரைகளுக்கு வழங்கப்படுகின்றன. முதலாவதாக நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபைக்கு ஆரம்பக் குத்தகை முறி வழங்கப்படுகிறது. இரண்டாவதாக விஹாரைக்குப் பொறுப்பாக உள்ள விஹாராதிபதிக்கு மற்றம் பரம்பரைக்கும் விடுவிப்பு அளிப்புப் பத்திரம் வழங்கப்படுகிறது. |
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் உடமைச் சொத்துவம்
முப்படைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் காணிகளின் உடைமைச் சொத்துவம் வழங்கப்படுகின்றன. இதற்காக அடைமையாக்கல் கட்டளைகள் தயாரிக்கப்படுதல் வேண்டும். |
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை விடுவித்தல்
அரச திணைக்களங்களுக்குக் காணிகளை வழங்கும்போது காணிகளை விடுவிக்கும் அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
மேல்^
|
| காணி அபிவிருத்தி |
இலங்கையில் ஆரம்ப கால குடியமர்த்தல் திட்டங்களில், காணிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பதற்காக, காணி அபிவிருத்தித் திணைக்களம் உருவாக்கப்பட்டது. காணி பெறுநர்களைக் குடியமர்த்தும் நோக்கத்திற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள், சமூக அறிவியல் வளர்ச்சிக்குரிய மனித நெய மேம்பாட்டு நடவடிக்கைகள் முதலியன இத்திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டன. 80 தசாப்த பாலப்பகுதியில் அரசினால் இத்திணைக்களம் ஒடுக்கல் செய்யப்பட்டதினால், இதனால் மேற்கொள்ளப்பட்டு வந்த கருமங்களைக் காணி ஆணையாளர் திணைக்களம் ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதன் பிரகாரம், இன்றும் மாகாணங்களுக்கிடைப்பட்ட பாரிய விவசாயக் குடியேற்றங்களுக்கான அபிவிருத்திப் பணிகளைக் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் மேற்கோணிடு வருவதுடன் கிராமிய விரிவாக்கல் திட்டங்களுக்கேற்ப காணி அபிவிருத்தி நடவடீக்கைகளை மாகாண காணி ஆணையாளர்கள் செயற்படுத்துகின்றனர். குடியேற்றங்களிலுள்ள அள்ளகப் பாதைகளைப் பேணுதல்இ குடிநீர் வழங்குதல் அரசுக்குரித்தான கட்டங்களைப் பேணுதல் மற்றும் குடியேற்றங்களுக்கான விசேட செயற்திட்டங்கள் ஆகியவற்றை இத்திணைக்களம் மேற்கோண்டு வருகின்றது.
மேல்^
|
| காணிகள் தொடர்பான வருமானத்தைச் சேகரித்தல் மற்றும் கணக்கீடுகள் பேணுதல் |
மாகாணங்களுக்கிடைப்பட்ட நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் பிரதேசங்களில் பல்வேறு கட்டளைச் சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள பல்வேறான அனுமதிப்பத்திரங்கள் தொடர்புடைய குத்தகைப் பணத்தை வசூலிப்பதும் குத்தகை வருமானம் தொடர்பாக ஏற்புடைத்தவாறு கணக்கீடுகளை மேற்கொள்வதும் இங்கே நடைபெறுகின்றன. இதற்கேற்றவாறு வருடாந்த மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. குத்தகைப் பணத்தைச் செலுத்தாமல் தட்டிக்கழிக்கும் நபர்களுக்கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், பற்றாக் குறைவாகவுள்ள குத்தகைப் பணத்தை அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்வதும், புதிய குத்தகைகள் வழங்கக்கூடிய சந்தர்ப்பங்களை அடையாளம் காண்பதம் இங்கு மேற்கொள்ளப்படும் பணிகளாகும்.
மேல்^
|
| உலக உணவுத்திட்டத்திட்டம். |
விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் தொடக்கம், ஒவ்வொரு குடியேற்றத்திலுள்ள ஒவ்வொரு குடியேற்ற வாசியும் தன்னுடைய பொருளாதார நிலையில் உறுதித்தன்மையை அடையும் வரையிலும் பெற்றுக் கொடுக்கப்பட்ட உணவுப் பொருள் உதவிகளை உலக உணவுத் திட்டத்தின்கீழ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த உணவுப் பொருள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்த குறித்த நிறுவனங்களிலிருந்து உணவுப் பொருள்களை அகற்றுதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பணிகள் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தினால் இரத்மலானையிலுள்ள உலக உணவுக் களஞ்சியசாலையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்கீழ் கமத்தொழில் சேவைகள் திணைக்களம், சுகாதாரம் மற்றும் போஷணை அமைச்சு, புணர்வாழ்வு அமைச்சு, சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களையும் அகற்றுதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மேல்^
|
| நடமாடும் சேவைகளை நடத்துதல் |
சமூக அறிவியல் பகுப்பாய்வின்கீழ்இ பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ளும் நோக்குடன்இ குடியேற்றங்களில் காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டுகொண்டுஇ அவற்றிற்கான தீர்வுகளை வழங்கும் பொருட்டு நடமாடும் சேவைகள் நடத்தப்படுவதுடன் இந்த மக்கள் சந்திப்புகள்:
- தேசிய மட்டத்திலும்
- மாகாண மட்டத்திலும்
- பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இந்நிகழ்வுகளின்போது, பிரதேசச் செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் அடையாளம் காணப்படும் பிரச்சினைகளில் உடனடியாகத் தீர்த்து வைத்தல், காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொருட்டு அனுமதிப்பத்திரம் வழங்குதல் போன்ற சேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. |
| சட்டரீதியான ஆலோசனைகள் வழங்குதல் |
| மேல்^ |